ETV Bharat / entertainment

தனுஷ் இயக்கத்தில் நட்சத்திர நடிகர்களுடன் சுடச் சுட ரெடியாகும் ‘இட்லி கடை’! - D52 title idly kadai - D52 TITLE IDLY KADAI

D52 titled as idly kadai: தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 52வது திரைப்படத்திற்கு ’இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு
தனுஷ் இயக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு (Credit - Actor Dhanush, @DawnPicturesOff X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 19, 2024, 5:59 PM IST

சென்னை: நடிகரும் இயக்குநருமான தனுஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் (Dawn pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

தனுஷின் 52வது படமாக தயாராகி வரும் ’இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் கிராமத்து கதையாக உருவாகி வருகிறது. தனுஷ் ராஜ்கிரண் நடித்த ’பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பவர் பாண்டி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த தனது 50வது படமான ’ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இந்த முறை மிஸ் ஆகாது.. 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Kanguva From November 14

தற்போது இளைஞர்களை கவரும் வகையில் தனுஷ் இயக்கியுள்ள ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் ’golden sparrow’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து உடனடியாக தனுஷ் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.