ETV Bharat / entertainment

அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஓடிடியில் வெளியானது!

OTT Released Movies: பொங்கலன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அயலான்' மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Ayalaan and Captain Miller movies released in OTT
அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஓடிடியில் வெளியானது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:22 PM IST

Updated : Feb 11, 2024, 1:06 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம், 'கேப்டன் மில்லர்' (Captain Miller). இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம், பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (பிப்.10) வெளியாகி உள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஓடிடியிலும் கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்' (Ayalaan). வேற்று கிரகவாசியை மையமாக வைத்து அறிவியல் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி இருந்தது. இப்படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.‌ இப்படத்திற்கு குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.‌ மேலும் இப்படத்தின் வெற்றிக்கு கிராபிக்ஸ் மிகப்பெரிய பலமாக இருந்தது எனலாம். தற்போது அயலான் திரைப்படமும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடங்கிய முதல் மாதத்திலேயே, இரண்டு படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அந்த படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: லால் சலாம்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் பொருந்திய கொடி உடன் திருச்சி ரசிகர்கள்!

Last Updated : Feb 11, 2024, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.