ETV Bharat / entertainment

டீப் ஃபேக் வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது! ராஷ்மிகாவின் அடுத்த நடவடிக்கை?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 11:44 AM IST

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி போலீசாருக்கு ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்து உள்ளார்.

டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா

புது டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட வழக்கில் டெல்லி போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கம் மூலம் டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவின் எக்ஸ் பதிவில், "டெல்லி போலீசாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் மீது அன்பு செலுத்தி என்னை பாதுகாக்கும் சமூகத்திற்கும் நன்றி. ஆண்கள், பெண்கள் உங்களது புகைப்படங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டால் அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டால் அது குற்றச் செயலாகும். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பர் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

நுண்ணறிவு சிறப்புப் பிரிவு மற்றும் டெல்லி காவல் துறையினர் ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வழக்கில் ஈமானி நவீன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். போலீசார் அளித்த தகவலின் படி, குற்றவாளி ஈமானி நவீன் ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், அவர் சென்னையில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி துணை காவல் ஆய்வாளர் ஹேமந்த் திவாரி கூறுகையில், "ஈமானி நவீன் ராஷ்மிகாவுக்கு சமூக வலைதலத்தில் ரசிகர்கள் பக்கம் நடத்தி வருவதாகவும், மேலும் இரண்டு பிரபலங்களுக்கு இரண்டு ரசிகர்கள் பக்கம் நடத்தி வருகிறார். அவரிடம் லேப்டாப் மற்றும் மொபைல்கள் பறிமுதல் செய்துள்ளோம்" என கூறினார்.

மேலும் "ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. குற்றவாளி இந்த டீப் ஃபேக் வீடியோ விவகாரத்தில் பல பிரபலங்கள் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை கண்டவுடன் அச்சமடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை அழித்துள்ளார். மேலும் அனைத்து வீடியோக்களையும் தனது டிஜிட்டல் பகக்த்திலிருந்து அழித்துள்ளார்" என மற்றொரு காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ கடந்த நவம்பர் மாதம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் போலீசார் டீப் ஃபேக் வீடியோ குறித்து அளித்த அறிக்கையில், “இந்த டீப் ஃபேக் வீடியோக்கள் சைபர் லேப்பில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் குற்றவாளியை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் கண்டுபிடித்தோம்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இங்கிலாந்த நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணின் ஒரிஜினல் வீடியோ அக்டோபர் 9ஆம் தேதி 2023இல் பதிவிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் டீப் ஃபேக் வீடியோ அக்டோபர் 13ஆம் தேதி 2023இல் பதிவிடப்பட்டுள்ளது. சமூக வலைதள பக்கத்தின் பின் தொடருபவர்கள் அதிகரிக்க செய்ய இவ்வாறு டீப் ஃபேக் வீடியோவை நவீன் பதிவிட்டுள்ளார்.

இந்த டீப் ஃபேக் வீடியோவால் அவரது சமூக வலைதள பக்கத்திற்கு 90 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 8 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் அதிகரித்துள்ளனர்” என கூறியுள்ளார். மேலும் நவீன் கூகுள் இணையதளம் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை 2019ஆம் ஆண்டு முடித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி வரும் பிரான்ஸ் அதிபர்.. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.