ETV Bharat / entertainment

'டியர்' திரைப்பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியது என்ன? - Dear movie trailer launch event - DEAR MOVIE TRAILER LAUNCH EVENT

Dear movie trailer launch event: ஆனந்த் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டியர் (dear) படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

Dear movie trailer launch event
டியர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:04 PM IST

சென்னை: செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டியர்’. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, இளவரசு உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது, "சமீபத்தில் வெளியான எனது அனைத்து படங்களும் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.‌ படத்தின் ஓடிடி உள்ளிட்ட வியாபாரங்கள் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள். அப்படி ஒரே நேரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், அனைத்து படங்களும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படம் இந்த சீசனின் கடைசி படமாகும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படத்திற்கு நான் இசையமைத்தேன். அதன்பிறகு இணைந்து நாங்கள் பணியாற்றவில்லை. இந்த கதையை ஐஸ்வர்யா ராஜேஷ் அனுப்பியதும் சிறப்புத் தோற்றம்தான் இருக்கும் என்று நினைத்து, வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று கதை கேட்டேன். இடைவேளை கேட்டதும் அழுதுவிட்டேன். இது லைவ் ரெக்கார்டிங் படம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தோம்.

இப்படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. குடும்ப உறவுகள் பற்றியும், திருமணமான தம்பதியினர் இடையே இருக்கும் சிக்கல்கள் பற்றி இப்படம் பேசுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நான் போட்டி போட்டுக்கொண்டு இப்படத்தில் நடித்தோம். இருவருக்குமான உடல்மொழி வித்தியாசமாக இருக்கும்" என்றார்.

அதனைத்தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, "இப்படம் இந்த வருடத்தின் முதல் படம். என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி என்று கூறுகின்றனர். இந்த படம் நன்றாக வந்துள்ளது. இதில் நடித்த எல்லோருக்கும் தனித்துவமான கதாபாத்திரம் கொடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தளம் மிகவும் அழகாக இருந்தது. அதேபோல் படமும் நன்றாக இருக்கும்.

இப்படத்தில் எனக்கு மூன்று வருட பயணம் உள்ளது. ஆனந்த் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பொக்கிஷம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு மிகப் பெரிய தூண். இவரது இசைக்கு நான் மிகப் பெரிய ரசிகை. ஜி.வி.பிரகாஷ் தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் செய்ய முடியாது. அவரது தங்கை பவானி ஸ்ரீயின் அண்ணன் தங்கை உறவைப் பார்க்கும் போது எனக்குப் பொறாமையாக உள்ளது. தேர்தல் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் இந்த படத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.