கோவா: தமிழில் நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம், நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் ஸ்பைடர், அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் உள்ளிட்ட படங்களின் மூலம் பரீட்சயமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தனது நீண்ட நாள் காதலர் ஜேக்கி பக்கானியை இன்று (பிப்.21) கரம் பிடித்தார்.
கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்வில் சீக்கிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இருவரது குடும்பத்தினர், சினிமா துறையில் மிக நெருக்கமானவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகரும், தயாரிப்பாளருமான ஜேக்கி பக்கானி - ரகுல் பிரீத் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளாக ரகுல் - ஜேக்கி திருமண வரவேற்பு நடைபெற்றது. முதற்கட்டமாக சீக்கிய முறைப்படி அனந்த கராஜ் நிகழ்வும் அதைத் தொடர்ந்து சிந்தி ஸ்டைலிலும் இருவரது திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், திருமண விழாவில் வருண் தவான், நட்டஷா தலால், அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குர்ரானா, ஷாகித் கபூர், ஆதித்ய ராய் கபூர், அனன்யா பாண்டே, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி பங்கீடு இறுதி! எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டி தெரியுமா?