ETV Bharat / entertainment

’தளபதி 69’... ஆரம்பமே அமர்க்களம்... விஜய்யுடன் இணையும் பிரபல பாலிவுட் வில்லன்! - Bobby deol in thalapathy 69 - BOBBY DEOL IN THALAPATHY 69

Bobby deol in thalapathy 69: எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணணைந்துள்ளார்.

விஜய்யுடன் இணையும் பிரபல பாலிவுட் வில்லன்
விஜய்யுடன் இணையும் பிரபல பாலிவுட் வில்லன் (Credits - @KvnProductions X account, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 5:26 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் 'தி கோட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால், தற்போது ஒப்புக் கொண்டுள்ளது படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார்.

அந்த வகையில் விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் (KVN productions) நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக கடந்த மாதம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது, 'one last time' என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. விஜய்யின் வெற்றிகரமான சினிமா பயணம் குறித்து இந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் விஜய் சினிமாவை விட்டு விலகக் கூடாது என கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ’தளபதி 69’ என அழைக்கப்படும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் 'The Torch Bearer Of Democracy' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. விஜய் திரை வாழ்வில் கடைசி படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய்யின் அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்" - அப்போலோ மருத்துவமனை அறிக்கை! - rajinikanth health condition

இந்நிலையில் படக்குழு ’தளபதி 69’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளியிடுகிறது. அந்த வகையில் ’தளபதி 69’ படத்தில் பாபி தியோல் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பாபி தியோல் முன்னதாக ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். மேலும் தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.