ETV Bharat / entertainment

ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நடந்து கொண்ட விஜய் சேதுபதி... போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர்! - BIGG BOSS SEASON 8

Bigg Boss season 8: பிக்பாஸ் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில், பிராங்க் கேம் பஞ்சாயத்து, முதல் வார எலிமினேஷன் என விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாண்ட விதம் குறித்து செய்தியில் காணலாம்.

பிக்பாஸ் விஜய் சேதுபதி, ரவீந்தர் புகைப்படம்
பிக்பாஸ் விஜய் சேதுபதி, ரவீந்தர் புகைப்படம் (Credits - Vijay Television Official Instagram account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 14, 2024, 11:19 AM IST

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தமிழ் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப முதலே ஆண்கள் பெண்கள் அணி, 24 மணி நேர எலிமினேஷன் என பல்வேறு சர்ப்ரைஸ்களை, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கினார். பல்வேறு பஞ்சாயத்துக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கு பிறகு விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்தார். விஜய் சேதுபதி முதல் வாரத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக நடந்து கொண்டார்.

ஆண்கள் அணி ஒற்றுமையாக இருப்பதாக பிம்பம் உருவான நிலையில், ஆண்கள் அணியில் இருக்கும் மறைமுக அரசியலை போட்டு உடைத்தார். விளையாட்டாக பேசி வைத்து செய்யப்பட்ட பிராங்கின் பின்னணியில் உள்ள தந்திரத்தை, விஜய் சேதுபதி வெளிச்சம் போட்டு காட்டினார். பெண்கள் அணியில் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருப்பதாகவும், ஆண்கள் அணியில் ஒளிவு மறைவு இருப்பதாகவும் கூறினார்.

தர்ஷிகாவை வீட்டின் தலைவியாக ஆக்கிய முடிவு சரியா? என்ற கேவிக்கு கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் சரி என்று கூறினர். இது ஒருபுறம் இருக்க வீட்டிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா பக்கம் விஜய் சேதுபதி கவனம் திரும்பியது. ஆண்கள் அணியில் "பலவீனமான போட்டியாளர்கள் யார் என சொன்னீங்க, பெண்கள் அணியில் யார்? என அவர்களிடம் ஏன் கூறவில்லை என்ற கேள்விக்கு சாச்சனா சமாளிக்க தொடங்கினார்.

ரவீந்தர் சாச்சனா கூறியது சுனிதா, ஹன்ஷிதா என சொல்ல, சுனிதா அழத் தொடங்கினார். சாச்சனா மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது என சுனிதா கூறிக் கொண்டிருந்த நிலையில், விஜய் சேதுபதி சாச்சனாவிற்கு எதிராக கேள்வியாக கேட்டு தாக்கினார். பின்பு மளிகை சாமான் பஞ்சாயத்து தொடங்கியது. இதில் பெண்கள் அணிக்கு கரம் மசாலா கொடுத்த ஜெஃப்ரி சரியாக மாட்டிக் கொண்டார். ‘மேஃக் குனாப் சாப்’ என தன் பேச்சை தொடங்கிய ஜெஃப்ரி, பெண்கள் அணியிடம் கரம் மசாலா கொடுத்து, உப்பு வாங்கியதாக கூறினார்.

அப்போது விஜய் சேதுபதி, "ஏம்பா இது மாதிரி சொகுசா இருக்கவும், கேம பேசி சமரசமா முடிக்கவா பிக்பாஸ் வந்தீங்க" என கறாராக கண்டித்தார். பின்னர் விஜய் சேதுபதி "வீட்டில உப்பு, சப்பு சுவாரஸ்யமே இல்லாம இருந்தா எப்படி" என கேட்டார். இதற்கு பிறகு அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட எலிமினேஷன் பஞ்சாயத்து தொடங்கியது. முத்துக்குமரன், சவுந்தர்யா, அருண் பிரசாத், ஜாக்குலின், ரஞ்சித் ஆகியோர் தப்பித்த நிலையில், ரவீந்தர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ரவீந்தர் வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு பக்கம் ரஞ்சித், "மிஸ் யூ தங்கம்", எனக் கூற மற்றொரு பக்கம், ஜாக்குலின் கண் கலங்கினார். பின்னர் ”வெளியில போய் நல்ல சாப்பாடு சாப்புட்ற” என சொல்லிவிட்டு ரவீந்தர் நடையை கட்டினார். விஜய் சேதுபதி ரவீந்தரிடம் பிக்பாஸ் அனுபவம் குறித்து கேட்க, ”நல்லா வெச்சி செஞ்சீங்க” என்றார் ரவீந்தர். இதனைத்தொடர்ந்து சரி வீட்ல இருக்கறவங்க பத்தி ஒரு விமர்சனம் பண்ணுங்க என விஜய் சேதுபதி கேட்க, ”ஃபர்ஸ்ட் அவனுங்க எல்லாம் வாழ்த்துவானுங்க, அத கேட்டு, அப்புறம் விமர்சனம் பண்ணுவோம்” என்றார், ரவீந்தர். அவர் சொன்னது போலவே ரவீந்தர் மீது பாச மழை பொழிந்தனர்.

பின்னர் ரவீந்தர் சக போட்டியாளர்களை தன் விமர்சனம் மூலம் முகத்திரையை கிழித்தார். முதலில் "ஆரவ் நீ போலி" என ஓப்பனாக ஆப்பு வைத்தார். பின்னர் ரஞ்சித்திடம் "இந்த தங்கம், வைரம் எல்லாம் பிக்பாஸில் வேலைக்கு ஆகாது. கேமை ஆடுங்க" என கூறினார். பின்னர் தர்ஷாவையும், ”நீ ஆடுறகு முழுவதும் ஃபேக் கேம்” என்றதும், தர்ஷா முகம் சுருங்கியது.

இதையும் படிங்க: ரஜினி கோயில்.. 171 திரைக் கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு; மதுரை ரசிகரின் வெறித்தனம்!

முத்துக்குமரன், சுனிதா, ஜாக்குலின் ஆகியோரை டைட்டில் வின்னர் லிஸ்ட்டில் வைத்திருப்பதாக பாராட்டு தெரிவிக்க அவர்களுக்கு ஒரே குஷியாக இருந்தது. அதேபோல் ஜெஃப்ரிக்கு, ”நீ பிக்பாஸ் நன்றாக பயன்படுத்தினால், உன் வாழ்க்கையே மாறும்” என்றார். பின்னர் அனைவருக்கும் தயவு செய்து சீரியஸாக விளையாடுங்கள் என அட்வைஸ் கொடுத்து விட்டு ரவீந்தர் விடை பெற்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.