சென்னை: ரவீந்தர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என எதிர்பார்ப்பு இருந்தது. அதன் ஆரம்பமாக முத்துக்குமரன், பெண்கள் அணியில் யார் பலவீனமான போட்டியாளர் என ஆண்கள் அணியிடம் கூறிக் கொண்டிருந்தார். அதில் யாரை பெண்கள் அணியிலிருந்து எலிமினேஷனுக்கு நாமினேட் செய்வது என்ற பேச்சு வந்த போது ”ஜாக்குலின், தர்ஷிகா பலம் அதிகம், சுனிதா டைரக்ட் அட்டாக் பண்ணும், தர்ஷாவை வீட்டில இருக்கணும் அது ஜோக்கர்” என முத்துக்குமரன் மார்க் போட்டு கொண்டிருந்தார்.
இது ஒரு புறம் இருக்க வீட்டுத் தலைவர் டாஸ்கில் நெருங்கிய தோழிகளாக வீடு முழுவதும் சுற்றி வந்த சவுந்தர்யா, ஜாக்குலின் இடையே வாக்குவாதம் முற்றியது. ”அட இது என்ன பெரிய விஷயம்” என தர்ஷிகா, சுனிதா இடையே மற்றொரு பக்கம் காது கிழியும் அளவு வாக்குவாதம். ”யப்பா நாங்க இங்க தொங்கிட்டு இருக்கோம் எங்கள எவணும் கண்டுக்கவே மாட்டிங்களா” என ஆண்கள் அணிக்காக சத்யாவும், பெண்கள் அணிக்காக பவித்ராவும் கயிற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக இந்த வார பிக்பாஸ் வீட்டு தலைவராக சத்யா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மளிகை சாமான் விவகாரத்தில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்து கொண்ட அன்ஷிதா, முத்துக்குமரனை வம்புக்கு இழுத்தார். அப்போது அன்ஷிதா, முத்துவை ”நீ இந்த வீட்டில் நடிக்கற, நீ ஃபேக்” என குற்றம் சுமத்த, முத்து ”நான் பாட்டுக்கு செவனேன்னு தான இருக்க, நா என்ன நடிக்கறன்னு சொல்லுங்க” என குரலை உயர்த்தினார். அதற்கு கத்திக் கொண்டே அன்ஷிதா நடையை கட்டினார்.
இதனைத்தொடர்ந்து நாமினேஷன் நேரம் தொடங்கியது. பெண்கள் எதிர்பார்த்தது போல் ரஞ்சித்தை கிட்டதட்ட அனைவரும் நாமினேட் செயதனர். ஆண்கள் அணியில் சவுந்தர்யா மற்றும் தர்ஷாவை அதிகமாக நாமினேட் செய்தனர். இவர்கள் தவிர்த்து இந்த வார நாமினேஷன் லிஸ்ட் ரொம்ப பெருசு. ஆர்னவ், தீபக், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, விஷால் என லிஸ்ட் போய்க் கொண்டே இருந்தது.
இதையும் படிங்க: 'சூர்யா 45' படத்தின் அப்டேட் வந்தாச்சு.. இயக்குநர் யார் தெரியுமா?
இதனைத்தொடர்ந்து இந்த வாரம் ஆண்கள் அணியிலிருந்து முக்கிய போட்டியாளராக பார்க்கப்படும் தீபக் பெண்கள் அணிக்கும், தர்ஷா ஆண்கள் அணிக்கும் இடம் மாறினர். இதனை தொடர்ந்து மளிகை சாமான் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் சத்யா, சாச்சனா ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஆண்கள் அணிக்கு 8700 ரூபாயும், பெண்கள் அணிக்கு 7200 ரூபாயும் பணம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியினர் ”சும்மா அள்ளி போட்டு வந்த” என விஜய் சேதுபதி வசனத்திற்கு ஏற்றார் போல், மளிகை பொருட்களை அள்ளி வந்தனர். இது அவர்கள் பெற்ற பணத்தை விட அதிகம் என பார்த்த போதே தெரிந்தது. இதனால் ஆண்கள் அணியில் கருப்பு ஆடாக இருக்கும் தர்ஷா குப்தா ஏற்படுத்த போகும் பிரச்சனை என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்