ETV Bharat / entertainment

அருண் விஜயின் வணங்கான் வெளியீடு எப்போது? படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்! - vanangaan movie Release

vanangaan Release: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் ஜூலை மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 12:28 PM IST

வணங்கான் படப்பிடிப்பு தளம்
வணங்கான் படப்பிடிப்பு தளம் (Credits - Sureshkamatchi X Account)

சென்னை: தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்களின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இயக்குநர் பாலா. அவரது இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் வணங்கான். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். இதில், மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கையில் விநாயகர் மற்றொரு கையில் பெரியார் சிலையை வைத்திருந்த அருண் விஜய்யின் தோற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில், வணங்கான் திரைப்படம் இந்தாண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் சிலை முன்பபாக பாலாவும் அருண் விஜய்யும் நிற்கின்றனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில், படம் எந்த மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி, தொடர்ந்து படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடர் வெற்றி படிக்கட்டில் சூரி.. கருடன் வெளியீட்டில் ரசிகர்கள் கருத்து என்ன? - Karudan Movie Review

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.