ETV Bharat / entertainment

5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள்.. அதர்வாவின் ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு நிறைவு! - Atharvaa Movie DNA - ATHARVAA MOVIE DNA

DNA Atharvaa Movie: அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள டிஎன்ஏ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 10:35 PM IST

சென்னை: 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஃபர்ஹானா' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் 'டிஎன்ஏ' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், “டிஎன்ஏ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அதர்வா முரளி இந்தப் படம் முடியும் வரை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். என் கரியரின் ஆரம்ப காலத்தில் அதர்வாவின் படங்களில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் என் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி. டிஎன்ஏ திரைப்படம் அவரது கரியரில் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் நிமிஷா சஜயன் திறமையாக நடித்துள்ளார். இது பலருக்கும் சவாலான கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், நிமிஷா அதை திறமையாகக் கையாண்டுள்ளார். படத்தை பார்வையாளர்களுக்காக திரையில் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம்" என்றார்.

க்ரைம்-ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் 5 பாடல்களுக்கு இசையமைத்திருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய தேவயானி.. பாசப்பிணைப்பில் நகுல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.