ETV Bharat / entertainment

அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் Romance' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - ashok selvan emakku thozhil romance

Emakku Thozhil Romance first look: அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள எமக்குத் தொழில் ரொமான்ஸ் பட ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட பலர் வெளியிட்டுள்ளனர்.

அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் Romance' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 6:51 PM IST

Updated : Mar 16, 2024, 7:58 PM IST

சென்னை: நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் இளம் நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சபாநாயகன், ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடித்து வருகிறார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "எனக்கு உடல் நலக்குறைவா?" ஒரே போட்டோவில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்!

Last Updated : Mar 16, 2024, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.