ETV Bharat / entertainment

வாழ்த்துகளை அள்ளும் அமரன்.. இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - AMARAN BOX OFFICE

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இரண்டு நாளில் உலகளவில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி (credit - Film Poster)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 4:53 PM IST

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை நேரில் பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள அமரன் திரைப்படம், காஷ்மீர் ராணுவ ஆபரேஷனில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைth தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பரியேறும் பெருமாள் 'கருப்பி' நாய் விபத்தில் உயிரிழப்பு!

130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.40.65 கோடி பாக்ஸ் ஆபிஸ் வருவாயைக் குவித்துள்ளது. அமரன் வெளியான இரண்டாவது நாளில் ரூ.19.25 கோடியை பதிவு செய்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், படம் ரிலீசான இரண்டாவது நாளில் சற்று சரிவு இருந்தபோதும், நேற்று (நவ.1) தமிழக திரையரங்குகளை 81.70 சதவீதம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, படத்திற்கு நிலையான வரவேற்பு இருந்து வருவதால் வார இறுதியில் இப்படம் மேலும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியை அடையலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அமரன் திரைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொண்டு மேஜர் முகுந்தன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் என்றும், இது அவரது கேரியரில் மிகச்சிறந்த நடிப்பாக அமையும் என்றும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அத்துடன், இவருக்கு இப்படம் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்றும் சினிமாத் துறையினர் பாராட்டியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.