ETV Bharat / entertainment

"அவதூறு வீடியோக்களை நீக்குக" - யூடியூப் சேனல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வக்கீல் நோட்டீஸ்! - AR RAHMAN DIVORCE

"தனது விவாகரத்து தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் உடனடியாக அந்த வீடியோக்களை நீக்காவிட்டால் அவதூறு வழக்கு தொடுக்கப்படும்" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் யூடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அறிக்கை
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அறிக்கை (Credits - A.R.Rahman X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 8:13 PM IST

சென்னை : பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான அழுத்தங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : "எனது அப்பா ஏ.ஆர்.ரகுமான் குறித்து தவறாக பேச வேண்டாம்"... மகன் ஏ.ஆர்.அமீன் வேதனை!

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானும் நாங்கள் முப்பதாவது ஆண்டை அடைய வேண்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை என்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து அவதூறு வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்களை உடனடியாக அவற்றை நீக்க வேண்டுமென தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், 'உண்மைக்கு புறம்பான வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் வகையில் செய்திகள், கற்பனையான சிலரின் பேட்டிகள் யூடியூப் சேனல்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அவதூறு வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்' என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.