ETV Bharat / entertainment

ராஜாக்கண்ணு முதல் வேட்டையன் வரை.. கமர்ஷியலுக்காக பல்டி அடிக்கிறாரா ஞானவேல்? - VETTAIYAN CASE ABOUT ENCOUNTER

Vettaiyan Director TJ gnanavel: ஜெய்பீம் திரைப்படத்திற்காக நாடே கொண்டாடிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் டிரெய்லர் முற்றிலும் முரணாக இருப்பதாக விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

ஜெய்பீம் போஸ்டர், இயக்குநர் டி.ஜே.ஞானவேல், வேட்டையன் போஸ்டர்
ஜெய்பீம் போஸ்டர், இயக்குநர் டி.ஜே.ஞானவேல், வேட்டையன் போஸ்டர் (Credits - 2D Entertainment, @LycaProductions)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 9, 2024, 7:29 PM IST

Updated : Oct 9, 2024, 7:43 PM IST

சென்னை: 2021ஆம் ஆண்டு கொரோனா 2வது அலை தணியத் தொடங்கிய போது ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. லாக் அப் மரணம், சிறையில் நடக்கும் சித்ரவதைகள், சாதி ரீதியான பாகுபாடு என ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த திரைப்படம். இத்திரைப்படத்தை மையமாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் பெரும் விவாதம் எழுந்தது. இன்னும் குறிப்பாக குறவர் எனும் சமுதாயம் தமிழ்நாட்டில் எந்த நிலையில் நடத்தப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறுவதாக இருந்தது.

"நான் நிருபராக பணியாற்றியவன். நீதிமன்றங்களில் செய்தி சேகரித்த போது, கிடைத்த அனுபவங்கள் தான் இந்த திரைப்படத்தை இவ்வளவு தரவுகளோடு துல்லியமாக எடுக்க காரணமாக அமைந்தது." இது ஜெய்பீம் வெளியான போது டி.ஜே.ஞானவேல் கூறிய வார்த்தைகள். ஜெய்பீம் வெளியாகி சரியாக 3 ஆண்டுகள் ஆகின்றன. வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அன்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த ஞானவேலை பாராட்டிய அதே நபர்கள் தான் இன்று அவரை விமர்சிக்கவும் செய்கின்றனர்.

வேட்டையன் திரைப்படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள பழனிவேலு ஈடிவி பாரத்திடம் பேசுகையில், ஜெய்பீம் திரைப்படத்திற்காக சமூக வலைத்தளங்களில் பாராட்டி எழுதியவர்களில் நானும் ஒருவன் தான். ஆனால், இப்போது போலீஸின் என்கவுன்டரை நியாயப்படுத்தி படம் எடுக்கிறார். பணம், புகழுக்காக இயக்குநர் ஞானவேல் மாறிவிட்டார்” என குற்றம் சாட்டுகிறார்.

வேட்டையன் திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் டிரெய்லர் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக பழனிவேலு கூறுகிறார். டிரெய்லரைப் பொறுத்தவரையிலும் என்கவுன்டர் செய்து குற்றவாளிகளைக் கொல்லுவதை நியாயப்படுத்துவது போல வேட்டையன் திரைப்படம் காட்சிப்படுத்துவதாக குற்றம்சாட்டிய பழனிவேலு, இதனை அனுமதித்தால் பொதுமக்கள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள் என கவலை தெரிவித்தார்.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியான டிரெய்லரில் ரஜினிகாந்த் பேசியுள்ள, “போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை” என்ற வசனம் இத்திரைப்படம் கஸ்டடி கொலைக்கு ஆதரவானது என குற்றம்சாட்டுவதற்கு மூல காரணமாக உள்ளது. பழனிவேலுவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ’வேட்டையன்’ திரைப்படம் நாளை (10.10.2024) வெளியாகிறது.

வேட்டையன் திரைப்படம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திபேன், "இத்திரைப்படத்தில் ஞானவேலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்கவுன்டர் பொது விவாதத்திற்கு வர வேண்டும் என செய்கிறாரா? அல்லது அதனை ஊக்கப்படுத்துவதற்கு செய்கிறாரா என தெரியவில்லை. ஆனால் திரைப்படம் வெளியாகும் போது இது மிகப்பெரிய விவாதமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது" என குறிப்பிட்டார்.

இது போன்று திரைப்படங்களில் காவல்துறையின் சட்டவிரோத வன்முறையை நியாயப்படுத்தும் காட்சிகள் வரும் போது, மக்களுக்கு இதனை நியாயப்படுத்தும் பொதுப்புத்தி உருவாகிறது என குறிப்பிட்டார். குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என கூறிய அவர், இது போன்ற போலி என்கவுன்டர்களை ஆதரித்தால், தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட நாமே காரணமாக இருப்போம் எனவும் கவலை தெரிவித்தார்.

மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் சினிமாவில் வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடுவார்கள் என குறிப்பிட்ட அவர், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ் என்பதே பொய்யான புகழுரை என்பதை மக்களுக்கு உணரச் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: வேட்டையன் டிக்கெட் முன்பதிவு: சைலண்டாக சம்பவம் செய்யும் சூப்பர்ஸ்டார்! - Vettaiyan Advance booking

வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள சூழலில், இத்திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஞானவேல்,"கருத்துள்ள, பிரமாண்டமான, பொழுதுபோக்கு திரைப்படத்தை ரஜினிகாந்த் கேட்டார். இதனைத் தான் நான் உருவாக்கியுள்ளேன்" என குறிப்பிட்டார்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் முன்பு நடித்த தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களில் என்கவுன்டருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது என்ற விமர்சனமும் எழுகிறது. கலவையான விமர்சனங்களை வேட்டையன் டிரெய்லர் பெற்றுள்ள நிலையில், படத்தை நாளை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 9, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.