ETV Bharat / entertainment

நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது! பெயர் என்ன தெரியுமா? - Amala paul blessed boy Baby - AMALA PAUL BLESSED BOY BABY

நடிகை அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வித்தியாசமாக இலை (Ilai) என தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர்.

Etv Bharat
Amala Paul and Jagat Desai Welcome baby boy (Photo: Instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 9:03 PM IST

ஐதராபாத்: நடிகை அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால், சிந்து சமவெளி, மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.

இதில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அதன்பின் சில படங்களில் தோன்றிய அமலாபால் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரது திருமணமும் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அமலா பால் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், தங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதி கூட்டாக இணைந்து அறிவித்து உள்ளனர்.

கடந்த ஜூன் 11ஆம் தேதி குழ்ந்தை பிறந்ததாகவும், ஆண் குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாகவும் அமலாபால் - ஜெகத் தேசாய் ஜோடி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புஷ்பா-2 ரிலீஸ் தேதி தள்ளிப்போனது! படக்குழு கூறும் காரணம் என்ன? - Pushpa 2 postponed

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.