மும்பை: நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை திசைவு நேயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா, வெளி நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை இழந்தார்.
சமந்தா நடித்து வெளியான யசோதா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது அவரது உடல்நிலை பற்றி கண்ணீர் மல்க பேசினார். கடைசியாக சமந்தா, விஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியானது. இதனையடுத்து மயோசிடிஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் தான் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “நான் ஒரு வழியாக எனது திரைப்பட வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டேன். இந்த காலகட்டத்தில் நான் ஒரு வேலையும் இல்லாமல் இருந்தேன். ஆனால், எனது நண்பருடன் சேர்ந்து உடல் நலம் குறித்த போட் கேஸ்ட் (podcast) செய்தேன்.
இதையும் படிங்க: விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி!
அந்த போட் கேஸ்ட் செய்தது எதிர்பாராதது. நான் மிகவும் விரும்பி செய்த போட் கேஸ்ட் அடுத்த வாரம் வெளியாகிறது. அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.” என கூறியுள்ளார். மேலும் நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
சிட்டாடல் வெப் தொடர் குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு இடைவேளை எடுத்து கொள்வது ஒரு தவறான முடிவாக இருக்காது. எனக்கு மிகவும் உதவியாக இருந்த ராஜன் டிடிகே மற்றும் அவரது குழுவினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிட்டாடல் தொடரில் எனது வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி!