ஹைதராபாத்: பிரபல நடிகை சமந்தாவின் தந்தை இன்று மாலை உயிரிழந்தார். சமந்தா முதல் படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் ’விண்னைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் நடித்தார். பின்னர் நடிகை சமந்தா தமிழில் அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’ மூலம் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் மாஸ்கோவில் காவெரி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, 10 எண்றதுக்குள்ளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். இது மட்டுமின்றி தெலுங்கில் மனம், மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமண வாழ்விலிருந்து பிரிந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் பாலிவுட்டில் சில வெப் சீரியஸில் நடித்து வருகிறார். சமந்தா நடித்த ’family man’ வெப் தொடர் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: ”விஜய் என்றாலே வெற்றி தான், அரசியலிலும் அப்படி தான்” - நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ’citadel honey bunny’ தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று மாலை உயிரிழந்தார். அவர் உயிரிழந்த காரணம் குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. சமந்தா தனது தந்தை மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவில், “Until we meet again dad” என பதிவிட்டுள்ளார். சமந்தா தந்தை உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்