ETV Bharat / entertainment

பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு? என்ன காரணத்திற்காக? யார் கொடுத்தது தெரியுமா? - Actress Poonam Pandey

Actress Poonam Pandey Faces Criminal action: நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் மும்பை போலீசாருக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் புகார் அளித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 10:50 PM IST

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி காலமானதாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (பிப்.3) தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூனம் பாண்டே மரண செய்தி விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டது. பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எப்படி சமூக வலைத்தளங்களில் நல்ல நிலையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார்?, பூனம் பாண்டே மரணம் தொடர்பான மருத்துவமனை அறிக்கை எங்கே? அவரது சடலம் எங்கே? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

இந்நிலையில், பூனம் பாண்டே தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை. ஆனால், இந்த நோய் ஆயிரக்கணக்கான பெண்களை தாக்கி வருகிறது. அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகள் மூலம் இதனை தடுக்கலாம். நோயை ஒழிக்க போராடுவோம்" என்று அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்த வீடியோவுக்கு பலர் ஆதரவு கரம் நீட்டி இருந்தாலும், போலியாக செய்தி பரப்பியதாக கூறி பூனம் பாண்டேவை ரசிகர்கள் வசைபாடிக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மாடல் பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் மும்பையின் விக்ரோலி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர்போன பூனம் பாண்டே, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என்று பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவ்வப்போது தனது பெயர் ஊடகங்களில் பேச வேண்டும் என்று ஆபாசமாக புகைப்படம் வெளியிடுவது என பல்வேறு சர்ச்சைகளில் அவர் ஏற்கனவே சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நான் உயிரோடு இருக்கிறேன் - பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.