ETV Bharat / entertainment

”நீங்கள் கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம்”... பிளாஸ்டிக் சர்ஜரி விமர்சனத்திற்கு நயன்தாரா பதிலடி! - ACTRESS NAYANTHARA

Actress Nayanthara about plastic surgery: நடிகை நயன்தாரா தனது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக எழும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா (Credits - nayanthara Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 5:28 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரபல நடிகை நயன்தாரா தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு உயிர், உலகு என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா '9skin' என்ற அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா, தனது முக அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக எழும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் எனது கண் புருவத்தை அழகுப்படுத்திக் கொள்வது எனது வழக்கம்.

அதனால் எனது முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் தெரியும். அதனால் எனது முகத்தில் ஏதோ வித்தியாசம் ஏற்பட்டது போல மக்கள் நினைக்கின்றனர். அதனால் எனது முகத்திற்கு நான் ஏதோ செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. ஆனால் இது வெறும் டயட் தான். எனது உடல் எடையில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் எனது கண்ணங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது கன்னத்தை கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை” என கூறியுள்ளார்.

நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தில் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டுடண்ட்ஸ்' (Dear Students) என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்கள் அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக செய்திகள் இணையத்தில் உலா வருகிறது.

இதையும் படிங்க: 24 வருடங்களுக்கு பிறகு இணைந்த எவர்கிரீன் ஜோடி... மாதவன், ஷாலினி புகைப்படம் வைரல்!

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், இதனால் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு முடக்குவாத நோய் வந்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டனர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறுப்பு தெரிவித்து ஆலியா பட் தனது சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.