சென்னை: பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து கடந்த மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ’ரகு தாத்தா’.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படம் இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் மையமாக கொண்டு உருவாக்கப்ப்ட்டுள்ளது. காமெடி படமாக உருவாக்கப்பட்ட ரகு தாத்தா நல்ல வரவேற்பு பெற்றது. சமூகப் பிரச்சனைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தை பற்றி இப்படம் பேசியது.
இந்நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ”பெண் சுதந்திரத்தை நம்பும் “கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ஜீ5 ஒடிடியில் ரகு தாத்தா படத்தை காணலாம். மேலும் இது நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள்: ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த பிரதர் படக்குழு! - Jayam ravi birthday
ரகுதாத்தா' படத்தின் இயக்குநர் சுமன் குமார் கூறியதாவது, ”ரகுதாத்தா படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் ஏற்படுத்தியது.
தமிழ்ச் செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நம்பகத் தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். ஜீ5 ஒடிடியில் இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்