சென்னை: ஹோம்பலே ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகாந்தர் தயாரிப்பில், இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் சுமன் குமார், இசையமைப்பாளர் சான் ரோல்டன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "மிகவும் சந்தோஷமான தருணம் இது. இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போதே நிறைய இடங்களில் என்னை சிரிக்க வைத்துவிடார். ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
The audio rights of #RaghuThatha goes to Saregama South!
— Keerthy Suresh (@KeerthyOfficial) July 20, 2024
🔊 ON 🔊@saregamasouth @hombalefilms #VijayKiragandur @sumank @vjsub @RSeanRoldan @rhea_kongara @durgeshprsingh @yaminiyag @editorsuresh @tejlabani @mdeii @siva_amstudios @StudioSneakPeek @PoornimaRamasw1… pic.twitter.com/FiTfqXVJiR
இந்தியில் படம் நடிக்கும் நான் தமிழில் இந்தியை எதிர்த்து படம் நடிப்பதாக கூறுகிறார்கள். இது இந்தி எதிர்ப்பு படமல்ல, இந்தி திணிப்புக்கும், பெண்களுக்கான திணிப்புகளுக்கும் எதிரான படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது சர்ச்சைக்குரிய படமாக இல்லாமல் சிரித்து மகிழக்கூடிய முக்கிய திரைப்படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனை டெக்னீஷியன்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய தேவயானி.. பாசப்பிணைப்பில் நகுல்! - Devayani Nakul emotional