ETV Bharat / entertainment

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கடந்து வந்த பாதை..! - CHITRA DEATH CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 8:44 PM IST

Actress Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வந்த பாதையை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு..

நடிகை சித்ரா(கோப்புப் படம்)
நடிகை சித்ரா(கோப்புப் படம்) (Credits - Chitra instagram page)

சென்னை: நிகழ்ச்சித் தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடிகை சித்ரா. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய தொடரில் முல்லை என்ற கதாபத்திரத்தின் மூலம் அனைவரது உள்ளத்திலும் குடிகொண்டவர் நடிகை சித்ரா.

அந்த சீரியலில் அவரது கதாபாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் ஒவ்வொரு குடும்பங்களிலும் அவரை சென்றடைய வைத்தது. இதன் மூலமாக தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டத்தை தனக்கென உருவாக்கி வைத்திருந்தவர் சித்ரா.

சித்ரா மரணம்: கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நடந்த இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகப் பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை: சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை: சித்திரா மரண வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியபின் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஹேம்நாத் ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக்கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும், அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும், தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டிருந்தார். இதனை அடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய மனு: சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துக்செய்ய கோரி சித்ராவின் கணவர் ஹேம்நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஹேம்நாத் மனு தள்ளுபடி: நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

சித்ராவின் தந்தை காமராஜின் மனு: சித்ரா மரண வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த 2022ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று சித்ராவின் தந்தை காமராஜ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பு: சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சித்ராவின் கணவர் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் கூடுதலாக இன்னும் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

வழக்கின் இறுதி தீர்ப்பு: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் இன்று (ஆக.10) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சித்ராவின் மரண வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆணவப் படுகொலை என்பது பாசத்தின் வெளிப்பாடு: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.