ETV Bharat / entertainment

தேனியில் நகைக் கடையை திறந்து வைத்த நடிகை அபர்ணா! - THENI

தேனி நகரில் பிரபல தனியார் நகைக்கடையின் புதிய கிளையை நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நடிகை அபர்ணா பாலமுரளி
நடிகை அபர்ணா பாலமுரளி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2024, 5:14 PM IST

தேனி: தேனி நகரில் பிரபல தனியார் நகைக்கடையின் புதிய கிளையை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சூரரை போற்று, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டு கடையைத் திறந்து வைத்தார்.

இதனை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சாலை இருபுறமும் நின்று கடை திறப்பு விழாவையும், நடிகை அபர்ணாவைக் கண்டு ரசித்தனர். அப்போது கடையின் அருகே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி நின்று ரசிகர்களிடம் பார்த்த கையசைத்த நடிகை அபர்ணா பேசியதாவது, "தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்ததில் மகிழ்ச்சி.

நகைக் கடையை திறந்து வைத்த நடிகை அபர்ணா (ETV Bharat Tamil Nadu)

ரசிகர்களாகிய உங்களுடைய அன்பிற்கு நான் எப்போதும் கடைமைபட்டுள்ளேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, இவ்வளவு கூட்டம் வரும் என்று” என தெரிவித்தார். பின் கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து கடையைத் திறந்து வைத்து பின் கடையின் உரிமையாளர்களிடம் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் நடிகை அபர்ணா.

இதையும் படிங்க: "அழகே, அஜித்தே" - ஸ்லிம் அன்ட் ஸ்டைலிஷான அஜித்குமார்!

முன்னதாக நடிகையை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடை முன்பு திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை அடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.