ETV Bharat / entertainment

"ரஜினி வழி தனி வழி..கமல் வழி தனி வழி.." - வேட்டையன் ஆடியோ லாஞ்சில் அபிராமி பஞ்ச்! - vettaiyan audio launch

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 58 seconds ago

ரஜினியின் வழி தனி வழி.. கமலின் வழி தனி வழி.. ரஜினியுடன் இணைந்து பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று 'வேட்டையன்' ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த நடிகை அபிராமி பெருமிதத்துடன் கூறினார்.

மஞ்சு வாரியர், வேட்டையன் போஸ்டர், அபிராமி
மஞ்சு வாரியர், வேட்டையன் போஸ்டர், அபிராமி (Credits - ETV Bharat Tamil Nadu, LYCA Producation X Page)

சென்னை : இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டக்குபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று(செப் 20) நடைபெறுகிறது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபிராமி, "எல்லாருக்கும் வணக்கம். வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய விழா. இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறப் போகிறது. இந்த திரைப்படத்தின் இசை அனிருத் தான். இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே போல இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது.

இதையும் படிங்க : ’Encounter Specialist Arrived’.. வேட்டையன் டீசர் வெளியானது! - VETTAIYAN PREVUE OUT NOW

இந்த விழாவில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது மிகப்பெரிய திரைப்படமாக இருக்கப் போகிறது. அதற்கு நீங்கள் பொறுப்பாக போகிறீர்கள். அனைவரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை காணுங்கள். கமலுடன் நடிப்பதும், ரஜினியுடன் நடிப்பதும் இரு வேறு அனுபவங்கள்.

ரஜினியின் வழி தனி வழி.. கமலின் வழி தனி வழி.. ரஜினியுடன் இணைந்து வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது. கேள்வி கேட்டு கேட்டு அவரை தொல்லை செய்து விட்டேன். அவருடைய மூளை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வம். படப்பிடிப்பை தாண்டி அவருடன் செலவழித்த நேரங்களை நான் சேகரித்து வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

'இது என்னுடைய பாக்கியம்': பின்னர் நடிகை மஞ்சுவாரியர் பேசுகையில்,"அனைவருக்கும் வணக்கம் உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறோம். கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். ஒரு நல்ல கூட்டணியில் இணைந்து வேலைப் பார்ப்பதை விட ஒரு நடிகருக்கு பெரிய சந்தோஷம் இல்லை. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உங்களை போல நானும் இந்த திரைப்படத்தை பெரிய ஸ்கிரீனில் பார்க்க காத்திருக்கிறேன். 'மனசிலாயோ' பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று சொல்வேன்.

இத்திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரத்தைப் போல இந்த திரைப்படத்தில் வரும் மற்ற கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும்" என்று மஞ்சு வாரியர் கூறினார்.

Last Updated : 58 seconds ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.