ETV Bharat / entertainment

"மோசமானதில் சிறந்ததை தேர்வு செய்வதுதான் கடினம்" - நடிகர் விஷால் கூறியது என்ன? - Devi Foundation

Actor Vishal: நடிகர் விஷால், சுவாமி விவேகானந்தர் நோயறிதல் மையத்தின் 26-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

Actor Vishal
நடிகர் விஷால்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:52 PM IST

சென்னை: அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்தி வரும் சுவாமி விவேகானந்தர் நோயறிதல் மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிகக் குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் உள்ள DG வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சுவாமி விவேகானந்தர் நோயறிதல் மையத்தின் 26-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டி, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை நடிகர் விஷால் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது, "லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர் நான் அல்ல, இங்கே உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இவர்கள்தான்.

பத்து ரூபாய்க்கு ரத்தப் பரிசோதனை என்பது சாதாரண விஷயம் அல்ல. இதை வெளி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒரே நாளில் ஒன்றரை லட்சம் நிதி திரட்ட முடிகிறது என்றால், இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. மேடையில் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு பேசுவதற்காக நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இன்னும் யாரிடம் சென்று இதுபோன்ற மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி ஆகியவற்றுக்காக நிதி உதவி கேட்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார்கள். சம்பாதிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மனிதர்கள் கூட, பத்து ரூபாயில் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்கிற சூழலை உருவாக்கியதை யாராலும் செய்ய முடியாது.

மருத்துவமனை செல்லும்போது நோயில் இருந்து நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்களைத்தான் தெய்வங்களாக பார்க்கிறோம். சிறந்ததிலேயே சிறந்ததைத் தேர்வு செய்வது என்பது எளிது. ஆனால், மோசமானதில் சிறந்ததை தேர்வு செய்வது என்பது மிகக் கடினம்.

அதனால்தான் என் அம்மாவின் பெயரில் 'தேவி' என்ற அறக்கட்டளையைத் துவங்கி, ஏழைக் குழந்தைகளுக்கு எப்படியாவது படிப்பைக் கொடுத்துவிட வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பார்க்கிங் பட பாணியில் நடிகர் பிர்லா போஸ்-க்கு வந்த பிரச்னை.. மகனை தாக்கியதாக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.