ETV Bharat / entertainment

மதம் கடந்த காதல் கதை; வித்தியாசமான தலைப்புடன் உருவாகும் விமல் படம்! - PARAMASIVAN FATHIMA MOVIE

நடிகர் விமல் நடிப்பில், இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின் பெயர் கொண்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரைப்படத்தின் பெயர் கொண்ட போஸ்டர்
திரைப்படத்தின் பெயர் கொண்ட போஸ்டர் (Credits- Esakki Karvannan X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2024, 1:25 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளியான வாகை சூட வா, களவாணி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விலங்கு இணைய தொடர் மற்றும் சார் என்ற திரைபடமும் அதிகளவில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமசிவன் பாத்திமா' படத்தில் விமல் தற்போது நடித்துவருகிறார்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், “இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் இடம் பெற உள்ளது. புரொடக்ஷன் நம்பர் 7ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும், கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன‌ என்பதை விளக்கும் படமாக இருக்கும்,” எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 'அமரன்' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி?... ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இப்படத்த்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு (பரமசிவன் பாத்திமா) மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ள நிலையில், தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்குகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று (நவ.30) இந்த படத்தின் பெயர் கொண்ட போஸ்டரை இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த படம் குறித்த இதர தகவல்கள் வெகு விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மதம், சாதிய வேறுபாடுகளை கடந்த காதல் கதை களம் கொண்டு பல படங்கள் வெளிவரும் நிலையில் தற்போது இந்த படம் மதம் கடந்த காதல் கதையாக இருக்கும் என படக்குழு அறிவித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “அவர்களுடன் வெளியில் செல்வது பிடிக்காது”... சமந்தா பற்றி அவரது தந்தை கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.