ETV Bharat / entertainment

"இதுதான் எனது மிகச் சிறந்த தந்தையர் தினம்"- பீனிக்ஸ் டீசர் வெளியிட்டு விழாவில் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி! - Phoenix Teaser released - PHOENIX TEASER RELEASED

Phoenix Teaser: சினிமா துறை என் மகனுக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவனுக்கு இது தான் பிடித்திருந்தது என நடிகர் விஜய்சேதுபதி பீனிக்ஸ் பட டீசர் வெளியிட்டு விழாவில் தெரிவித்தார்.

பீனிக்ஸ் டீசர் போஸ்டர், விஜய்சேதுபதி புகைப்படம்
பீனிக்ஸ் டீசர் போஸ்டர், விஜய்சேதுபதி புகைப்படம் (Credits - VIJAYSETHUPATHI X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 10:56 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஜூன்.14ஆம் தேதியன்று மகாராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இது விஜய்சேதுபதியின் 50வது படமாகும்.

விஜய்சேதுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நுங்கம் பாக்கத்தில் உள்ள லீ மேஜிக்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் அனல் அரசு, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா விஜய்சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேடையில் பேசிய விஜய்சேதுபதி, "எதுவுமே திட்டமிடாமல் எதேச்சையாக நடந்தது. நானும் அனல் அரசு இருவரும் ஒரு பயணத்தில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு வந்தோம். அனல் அரசு எனது மகனிடம் கதை சொல்லி இந்த படத்திற்கு அவர் சரியாக இருப்பாரா? என்று என்னிடம் கேட்டார். உங்களுக்கு சரி என்றால் நான் அவனிடம் கேட்கிறேன் என்றேன்.

நான் துளியும் கற்பனை செய்யவில்லை. நான் உணர்வுப் பூர்வமாக இல்லை. எனது பையன் இந்த துறைக்கு வரும்போது இங்கு சர்வைவ்வாவது கடினம். முடிந்த அளவு நான் இங்கு உள்ள சர்வைவல் எவ்வளவு கடினமானது என்று நிறைய முறை சொல்லிக் கொடுத்துள்ளேன். இந்த துறையில் ஒவ்வொரு முறையும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறோம்.

எனது மகனுக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவனுக்கு இது தான் பிடித்திருந்தது. இந்த டீசரை பார்த்து நான் மிகவும் அகம் மகிழ்ந்தேன். எனது மகன் பிறந்து 19வது தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளேன். ஆனால் இதுதான் எனது மிகச் சிறந்த தந்தையர் தினம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "இளையராஜா பாடல்களை எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றே பாடுகிறேன்"- மகன் கார்த்திக் ராஜா! - copy right issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.