ETV Bharat / entertainment

விஜய் பிறந்தநாளுக்கு சின்ன டிரீட்.. 'கோட்' படத்தின் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி! - GOAT Movie Update - GOAT MOVIE UPDATE

GOAT Movie Song Update: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'கோட்' படத்தில் 2வது பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடல் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோட் படத்தின் அப்டேட் போஸ்டர்
கோட் படத்தின் அப்டேட் போஸ்டர் (Credits - Actor vijay 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 3:48 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தயாரிப்பாளர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் விஜய் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில், அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார்.

அதுமட்டுமின்றி, 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அந்த வகையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'மாநாடு' படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து தற்போது விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்தில், 'சிங்கப்பூர் சலூன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடத்துள்ளார். மேலும், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் என ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் எனவும், இதன் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகவும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இந்த படத்தின் 'விசில் போடு' பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், படத்தில் இருந்து மற்றொரு பாடலான "சின்ன சின்ன கண்கள்" என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். யுவன் இசையில் மெலோடி பாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் பிறந்தநாள்: த.வெ.க கட்சியினர் தங்க தேர் இழுத்து வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.