சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக ஃபேமிலி ஸ்டார் மற்றும் ஜெர்ஸி படம் வெளியானது. இதில் ஜெர்ஸி படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு தற்போது ' VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "ஒரு நாவலை படித்தது போன்ற அனுபவம்"... ரஜினிகாந்தைச் சந்தித்த மகாராஜா இயக்குநர் நெகிழ்ச்சி! - Rajini praised Nithilan Swaminathan