சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரும் நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர். சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகாவும் சமீப காலமாக உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் தனது பள்ளியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இதனை நேரில் சென்று பார்த்த சூர்யா தனது மகனை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சூர்யா, சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று தேவ்வை வாழ்த்தியுள்ளனர்.
சக போட்டியாளர்கள் மற்றும் தனது மகனின் நண்பர்களையும் சூர்யா ஊக்குவித்து பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற மிகப் பிரமாண்டமான படத்தில் நடித்து வருகிறார். பத்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. கங்குவா இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு! ரிலீஸ் தேதி எப்போ? - Manjummel Boys OTT Release Date