ETV Bharat / entertainment

படப்பிடிப்பில் 20 நாட்கள், குடும்பத்துடன் 10 நாட்கள்... மும்பைக்கு ஷிஃப்ட் ஆக சூர்யா கூறிய காரணம் என்ன? - ACTOR SURIYA ABOUT MUMBAI SHIFT

Actor suriya about mumbai shift: கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு இடம் மாறிய காரணம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா, ஜோதிகா
நடிகர் சூர்யா, ஜோதிகா (Credits - Jyotika Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 1:39 PM IST

சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’கங்குவா’. சூர்யா திரை வாழ்விலேயே அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே கங்குவா படத்தின் இரண்டு பாடல்கள் Fire song, Yolo ஆகியவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கங்குவா திரைப்பட குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக சூர்யா நடித்த திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், கங்குவா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என சூர்யா இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். மேலும் கடந்த சில வருடங்களாக தனக்கு சினிமாவில் சற்று சோதனை காலம் எனக் கூறிய சூர்யா, அதனை எல்லாம் ஈடு செய்யும் வகையில் கங்குவா இருக்கும் எனவும் கூறியுள்ளார். தற்போது படக்குழு வட இந்தியாவில் தீவிர ப்ரமோஷலில் இறங்கியுள்ளது.

கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் சூர்யா தான் மும்பைக்கு இடம் மாறியது குறித்து பேசியுள்ளார். அது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கையில், “எனது மனைவி ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். எனக்காக 18 வயது முதல் சென்னையில் இருக்கிறார். அவரது குடும்பம், நண்பர்கள், கரியர் என அனைத்தையும் விட்டுவிட்டு 27 வருடம் சென்னையில் இருந்தார். கரோனா காலத்திற்கு பிறகு மும்பைக்கு இடம் மாற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த துப்பாக்கி.. தவெகவில் அரசியல்.. சிவகார்த்திகேயன் நச் பதில்கள்!

நாங்கள் இடம் மாறிய பிறகு ஜோதிகா ஸ்ரீகாந்த், ஷைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜோதிகா இங்கு தனது பெற்றொருடன் மீண்டும் நேரம் செலவழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஜோதிகாவுக்கு அவரது நண்பர்கள் உள்ளிட்டவை முக்கியம். எதற்காக அவரது பெற்றொருடன் நேரம் செலவழிப்பதை எனக்காக தியாகம் செய்ய வேண்டும்? மேலும் எங்களது குழந்தைகளின் படிப்பிற்காகவும் மும்பைக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டது. மாதம் 20 நாட்கள் எனது படப்பிடிப்பில் இருப்பேன். மற்ற 10 நாட்கள் மும்பையில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவேன்” என கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகா இணைந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இன்டர்நெட்டில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.