ETV Bharat / entertainment

’கிரிகிரி டிமாக்கிரி’.. டபுள் ஐஸ்மார்ட் படத்தின் டீசர் வெளியானது! - double ismart teaser out

Double Ismart: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட் படத்தின் டீசர் வெளியானது.

டபுள் ஐஸ்மார்ட் படத்தின் டீசர் போஸ்டர்
டபுள் ஐஸ்மார்ட் படத்தின் டீசர் போஸ்டர் (credits - Sanjay Dutt x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 7:18 PM IST

சென்னை: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டபுள் ஐஸ்மார்ட். இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான இன்று (மே 15) ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசரில், "ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில வார்த்தைகளைப் பயன்படுத்தும் வாய்ஸ் ஓவருடன் டீசர் தொடங்குகிறது. பின்னணியில் கிரிகிரி டிமாக்கிரி என்ற இசை ஒலிக்கிறது.

பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் உஸ்தாத் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற டபுள் ஐஸ்மார்ட்டாக ராம் மீண்டும் வந்துள்ளார். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தைப் போலவே, டபுள் ஐஸ்மார்ட்டிலும் ஆன்மீக தொடுதலுடன் அதிரடியான ஆக்‌ஷன் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. பிரமாண்டமான சிவலிங்கமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும் பெரும் கூட்டமும் பார்வையாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும்" என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், டீசரில் ஒற்றை வரியில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. சஞ்சய் தத் ஸ்டைலான வில்லனாக நடிக்கிறார். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள டபுள் ஐஸ்மார்ட் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்கா த.வெ.க? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சீக்ரெட் உடைத்த நிர்வாகி! - Tamilaga Vettri Kazhagam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.