ETV Bharat / entertainment

'இந்தியன் 2' எப்படி இருக்கு? ரஜினி ரியாக்ஷனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி! - rajinikanth about Indian 2 - RAJINIKANTH ABOUT INDIAN 2

Rajinikanth about Indian 2: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தியன் 2 திரைப்படம் நன்றாக உள்ளதாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 3:57 PM IST

சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் 'வேட்டையன்' மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

ரஜினிகாந்த் கடைசியாக 2.0, பேட்ட ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்தார். இதனைதொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நடிகர் ரஜினிகாந்த் கொச்சியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கூலி திரைப்பட அப்டேட் குறித்த கேள்விக்கு, "கூலி திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது" என்றார். இதனையடுத்து 'இந்தியன் 2' திரைப்படம் குறித்த கேள்விக்கு, "இந்தியன் 2 படம் பார்த்தேன்; நன்றாக உள்ளது" என்றார்.

பின்னர் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, விரைவில் படம் வெளியீடு குறித்து அறிவிப்புகள் வெளியாகும்" என ரஜினி கூறியுள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்தியன் 2 திரைப்படம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மஃப்டி இயக்குநர் இயக்கத்தில் சூர்யா?.. வெளியான மாஸ் அப்டேட்! - Suriya to collaborate with narthan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.