ETV Bharat / entertainment

"சேவையே கடவுள்".. மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்! - Raghava Lawrence

Raghava Lawrence: கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது 13 இருசக்கர வாகனங்களை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

Raghava Lawrence
Raghava Lawrence
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:30 PM IST

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் குரூப் நடனக்கலைஞராக திரைத்துறையில் நுழைந்து, படிப்படியாக உயர்ந்து, தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வருபவர். நடிப்பு மட்டுமின்றி, ஏழைக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் 'கை கொடுக்கும் கை' (kai kodukkum kai) மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனம் அன்பளிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.

மேலும், ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக 'கை கொடுக்கும் கை' எனும் ஆதரவு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர், நடனம் முதலான பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர்.

அது போல், தற்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல்வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ்-இன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை அறிமுகப்படுத்தும் பத்திரிகை ஊடக சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், "நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாகச் சொன்னார்கள். அது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. அதனால் இவர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாங்கி தரவிருக்கிறேன். அது மட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடு கட்டித் தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளியுங்கள்" என்று பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டில், மாற்றுத்திறனாளி குழுவினரைச் சந்தித்துப் பாராட்டியதோடு, சொன்னது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டி (scooty) என சுமார் 13 கூட்டர்களை வழங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், "வாழ்வோம், வாழ வைப்போம்.. சேவையே கடவுள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச்சூடு சம்பவம்: மும்பை போலீசார் விளக்கம் என்ன? - Firing At Salman Khan House

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.