மதுரை: விளாங்குடி பகுதியில் தனியார் பள்ளியின் 39வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் புகழ் மற்றும் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைவு பரிசுகளை வழங்கிய பிறகு, இருவரும் இணைந்து ஸ்டாண்ட் அப் காமெடி செய்தனர்.
அதன் பிறகு புகழ் மற்றும் தங்கதுரை இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, நடிகர் புகழிடம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கு, "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். இது அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சனையா, இல்லை தொலைக்காட்சி நிறுவனத்துடனான பிரச்சனையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. உங்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக தான் இதை பார்க்கிறேன் என்றார்.
மேலும் இதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு என்னிடம் செய்தியாளர்களான நீங்கள் கேள்வி கேட்பதை தவிர்ப்பது நல்லது. பொதுவெளியில் வந்த விஷயம் என்றாலும் கூட சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய வீடியோக்களை நாம் தவிர்ப்பது தான் சிறப்பு என்றார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளரை பார்த்து, நான் உங்களைச் சொல்லவில்லை, ஆயிரம் நபர்கள் இதுபோன்று மைக்கை கொண்டு வந்து வீடியோ போடுகிறார்கள்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகலுக்கு என்ன காரணம்? வீடியோ வெளியிட்ட குரேஷி! - kureshi about manimegalai issue
இந்த பிரச்சனையில் என்ன நடந்திருக்கும் என்பது சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும் தான் தெரியும்" என்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் தங்கதுரை பேசுகையில், "முன்பெல்லாம் ஒரு சில தொலைக்காட்சிகள் தான் இருக்கும் வாய்ப்பு தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நிறைய சமூக வலைதளங்கள் வந்துவிட்ட நிலையில், இன்றைய இளைஞர்கள் மிக எளிதாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான களம் உருவாகியுள்ளது" என்றார்.