சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனையடுத்து, தற்போது மகிழ் திருமேனி இயக்கியுள்ள 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சியளித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித்தின் பல கெட்டப்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இப்படத்திற்காக அஜித் எடை குறைத்து படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அவரது புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமுக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், அந்த புகைப்படங்களில் அஜித் அமர்க்களம் திரைப்பட நாட்களில் இருந்தது போல அழகாகவும், ஸ்லிம்மாகவும் உள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நான் சூர்யாவிற்கு கதையே சொல்ல மாட்டேன்" - கங்குவா நெகடிவ் விமர்சனம் குறித்து மிஷ்கின் பேச்சு!
இத்தகைய சூழலில், அஜித் படப்பிடிப்பில் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் பிரசன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "அழகே, அஜித்தே அப்படி வெசுகலாமா?" என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் "கடவுளே, அஜித்தே" என கூச்சலிடுவதால் நடிகர் அஜித் அவ்வாறு தன்னை அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இத்தகைய நிலையில், நடிகர் பிரசன்னா "அழகே, அஜித்தே" என பதிவிட்டுள்ளார்.
அஜித், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் 'குட் பேட் அக்லி' ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.