ETV Bharat / entertainment

அனிமல், ஆர்ஆர்ஆர், பாகுபலி-2 படங்களை பின்னுக்குத் தள்ளும் கல்கி! ரூ.725 கோடியை தாண்டி வசூல் சாதனை! - kalki cross Rs700 crore box office - KALKI CROSS RS700 CRORE BOX OFFICE

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Etv Bharat
Prabhas' Kalki 2898 AD Crosses Rs 700 Crore Mark Globally (Photo: Instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 3:53 PM IST

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கல்கி 2898 AD. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் நடித்து இருந்தனர். இயக்குநர் நாக் அஸ்வின் படத்தை இயக்கிய நிலையில், சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

படம் சர்வதேச அளவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் நல்ல வசூல் குவித்து வருகிறது. பாக்ஸ் ஆபிசில் கல்கி திரைப்படம் 700 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்கா நாட்டில் படம் திரையிடப்பட்ட நிலையில், அங்கும் நல்ல வசூலித்து வருகிறது.

வட அமெரிக்க ரசிகர்களை நன்கு கவர்ந்து உள்ள கல்கி திரைப்படம் அங்கு மட்டும் 13 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூலித்து உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. படம் ரிலீசான 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் 725 கோடி ரூபாயை படம் வருவாயாக ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளில் மட்டும் 45 கோடி ரூபாயை படம் வசூலித்து உள்ளது. அடுத்து இரண்டு நாட்கள் வாரயிறுதி என்பதால் மேலும் படத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வசூலை தவிர்த்து வட அமெரிக்காவில் விரைவில் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்த முதல் என்ற சாதனையையும் கல்கி படம் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்திய பாக்ஸ் ஆபிசில் அனிமல், ஆர்ஆர்ஆர், ஜவான், பதான் மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் ஆகிய படங்களின் வசூல் சாதனையை படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரோட்டுக்கடை Vs பாரம்பரிய கடை.. யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் டீசர் ரிலீஸ்! - Chutney Sambar web series

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.