ETV Bharat / entertainment

கோவை கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்.. 'டீன்ஸ்' பட ரிலீஸுக்கு பாதிப்பா? - ACTOR PARTHIBAN - ACTOR PARTHIBAN

ACTOR PARTHIBAN: டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு பணம் பெற்று ஏமாற்றியதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார்.

actor parthiban, coimbatore police station
actor Parthiban and coimbatore police station (CREDIT - Parthiban x page, ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 3:07 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகர் பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தை சிவபிரசாத் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கி வரும் டீன்ஸ் (TEENZ) திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

படத்தின் VFX பணிகளை கடந்த பிப்ரவரி 10 அல்லது 20ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்வதாக கூறியிருந்த நிலையில், சிவபிரசாத் 68 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் 42 லட்சம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததாக தெரிகிறது. பார்த்திபன் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார். இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.

இதனிடையே, சிவபிரசாத் கடந்த ஜூன் 4ஆம் தேதி 88 லட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டது, குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காதது தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில், தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசம் (406), ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவபிரசாத்தின் தனியார் கிராபிக்ஸ் நிறுவனமானது பல்வேறு முன்னணி திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஞ்சித் நடித்த 'கவுண்டம்பாளையம்' பட ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் என்ன? - kavundampalayam movie

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.