ETV Bharat / entertainment

மஹத், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காதலே காதலே' படப்பிடிப்பு நிறைவு! - mahath raghavendra bharathi raja

Kathale Kathale movie: பிரேம்நாத் இயக்கத்தில் மஹத், மீனாட்சி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காதலே காதலே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மஹத், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காதலே காதலே' படப்பிடிப்பு நிறைவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:48 PM IST

சென்னை: நடிகர் சிம்புவின் நண்பரான மகத், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிரபலமடைந்தார். மேலும் சென்னை 28 2ஆம் பாகத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இவரது நடிப்பில் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா' படம் வெளியாக உள்ளது. இதனைதொடர்ந்து ஸ்ரீவாரி ஃபில்ம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் 'காதலே காதலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஹத், மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இது குறித்து மகிழ்வுடன் பகிர்ந்திருப்பதாவது, "ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது சரியான குழு மற்றும் திட்டமிடல் மூலம் முழுமையடைகிறது என்று நம்புகிறேன். ‘காதலே காதலே’ படத்தின் மொத்தக் குழுவினரும், ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி, ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளராக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

ஒரு இயக்குநரின் திறமை சிறந்த படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அனைத்தையும் திறமையாக நிர்வகிப்பது மற்றும் திட்டமிட்டபடி அனைத்தையும் முழுமையாகச் செய்வதும் தான். இயக்குநர் பிரேம்நாத் இந்தத் திறனைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் மஹத் ராகவேந்திரா திறமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் படம் வெளியாகும் தேதியை அறிவிப்போம்" எனக் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர். 'சீதா ராமம்' படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எம்.எஸ். சாகு தயாரிப்பு வடிவமைப்பைக் கவனித்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க: அஜித்குமாருக்கு ஸ்கேன்? - வெளியான முக்கிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.