ETV Bharat / entertainment

இறங்கி குத்தாட்டம் போட்ட கவின்.. 'ப்ளடி பெக்கர்' டீசர் வெளியானது! - bloody beggar teaser out now - BLOODY BEGGAR TEASER OUT NOW

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் 'ப்ளடி பெக்கர்' படத்த்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ப்ளடி பெக்கர் போஸ்டர், கவின்
ப்ளடி பெக்கர் போஸ்டர், கவின் (Credits - Kavin X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 10:30 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவர் தற்போது இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று (அக் 31) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (அக் 10) வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பது டீசர் மூலம் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க : பிக்பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன்... இளம் நடிகை வெளியேற்றம்!

இந்த டீசரில் கவின் முதலில் இரு கால்களும் இல்லாத மாதிரி நான்கு சக்கரங்கள் கொண்ட பலகையில் சாலையோரத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகளுடன் டீசர் மூவ் ஆகின்றது. அப்போது, சாலையில் ஒரு சாவு ஊர்வலம் செல்கிறது. அதற்கு கவின் பலகையை விட்டு எந்திரிச்சு குத்தாட்டம் போடுவது தான் இந்த டீசரின் டிவிஸ்ட் ஆக அமைகிறது என்கின்றனர் ரசிகர்கள். இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.