ETV Bharat / entertainment

’அத்தான் அத்தான்’.. கார்த்தி நடிப்பில் மெய்யழகன் டீசர் வெளியானது! - Meiyazhagan teaser out now - MEIYAZHAGAN TEASER OUT NOW

Meiyazhagan : இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மெய்யழகன் டீசர் போஸ்டர்கள்
மெய்யழகன் டீசர் போஸ்டர்கள் (Credits - karthi X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 8:02 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'மெய்யழகன்'. இப்படத்தில் அரவிந்த் சுவாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கிராமத்து கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளது.

அந்த டீசரில் அரவிந்த் சுவாமியை கார்த்தி ’அத்தான் அத்தான்’ என பேசி பின்தொடரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அத்தான் - மச்சானுக்கு இடையே உள்ள அன்பை குறிக்கும் விதமாக படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்திக் தனது 26 மற்றும் 27வது படத்தில் நடித்து வருகிறார். 26வது படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு வா வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : "துப்பாக்கிய புடிங்க சிவா"... வெங்கட் பிரபு வசனத்தை மாற்றிய விஜய்!... காரணம் என்ன? - Sivakarthikeyan cameo in GOAT

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.