ETV Bharat / entertainment

'பயமறியா பிரம்மை' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் - நடிகர் ஜாக் ராபின்சன் நெகிழ்ச்சி! - Bayamariya Brammai movie

Bayamariya Brammai: 'பயமறியா பிரம்மை' படம் வித்தியாசமானதாகவும், புதிய அனுபவத்தையும் கொடுக்கும் என்று நடிகர் ஜாக் ராபின்சன் கூறினார்.

படக்குழு புகைப்படம்
படக்குழு புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 6:21 PM IST

சென்னை: இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா, பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி, குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் நேற்று நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன்.‌ கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர் ரியலிசம் மற்றும் இருள்முகத்தைப் பற்றிய நிறைய கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

இயக்குநர் ராகுல் கபாலி மூலமாக இந்த வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் கே உடன் பணியாற்றுவது எனக்கு சவுகரியமாக இருந்தது. மேலும் இந்த குழுவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

ஒளிப்பதிவாளர் நந்தா பேசுகையில், ''இந்தப் படத்தின் இயக்குநர் ராகுலும், நானும் பால்ய கால நண்பர்கள். இந்தப் படத்திற்கான விஷுவல் எப்படி இருக்க வேண்டும் என்பதை திரைக்கதை எழுதும் போதே வடிவமைத்தோம். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டோம். அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.‌ ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்த படைப்பு பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில், ''இந்தப் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லலாம். கடந்த 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக இருக்கும். அதைக் கேட்டு நடிக்கும்போது சற்று பதட்டமும் இருக்கும்.

இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் நடிக்க முடியுமா? என தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. இதைக் கவனித்த இயக்குநர், உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சகோதரரைப் போல கொண்டாடினார்கள்.‌

இந்தப் படத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தைப் பார்த்து எப்படி இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்திருக்கிறேன். 'மின்னல் முரளி' படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்து, நம்மால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரைப் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில், ''இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதற்கு இப்படத்தின் கதை தான் காரணம். இப்படத்தில் பாடல்கள், டீசர் ஆகியவற்றைக் காணும்போது உணர்ந்திருப்பீர்கள். வழக்கமான படங்களிலிருந்து இந்த திரைப்படம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கான இசை கோர்ப்பு பணிகளை இன்று காலையில் தான் நிறைவு செய்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் ராகுல் கபாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கபாலிக்கு பின் வந்த அழைப்பு: நடிகர் விஸ்வாந்த் பேசுகையில், ''கபாலி படம் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்காக முதன்முதலில் அழைத்தவர் இயக்குநர் ராகுல் கபாலி. இந்தப் படத்தில் ஜெகதீஷ் என்ற முதன்மையான கதாபாத்திரத்துடன் என்னுடைய கதாபாத்திரம் இணைந்து பயணிக்கிறது. ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். அதற்கு இயக்குநர் அவர் ஒரு திறமையான நடிகர் என சொன்னார்.

படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற பிறகுதான் அந்த திறமையான நடிகர் குரு சோமசுந்தரம் என தெரிய வந்தது. அவரைப் போன்ற ஒரு நடிப்பு ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இப்படத்தில் சிங்கிள் டேக்கில் நானும் குரு சோமசுந்தரமும் நடித்திருக்கிறோம். இதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

முதல் படம்: இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில், ''இது என்னுடைய முதல் படம். இந்த கதையைத்தான் படமாக்க வேண்டும்; இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை. குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வுரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள். இந்த திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும்" என்றார்.

இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் வைப்.. குணா ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா? - Guna Movie Rerelease

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.