ETV Bharat / entertainment

ராயன் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! படக்குழுவின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குஷி! - Raayan trailer release date - RAAYAN TRAILER RELEASE DATE

ஜூலை 16ஆம் தேதி நடிகர் தனுஷின் ராயன் பட டிரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Dhanush to Unveil Raayan Trailer Soon (Sun Pictures X handle)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 6:10 PM IST

ஐதராபாத்: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ராயன் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தனுசுடன் இந்த படத்தில் காலிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். படத்தை ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தவிர்த்து மற்ற அப்டேட்டுகளை பட்டக்குழு அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இந்நிலையில், வரும் ஜூலை 16ஆம் தேதி ராயன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டருடன் கூடிய டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ராயன் படத்தில் பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

துஷாரா விஜயன் தனுஷின் சகோதரியாகவும், சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிகர் தனிஷின் சகோதரர்களாவும் படத்தில் தோன்ற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ப.பாண்டி படத்திற்கு பின்னர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் ராயன் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா, இளையராஜா பயோபிக், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்கள் வரிசயாக திரைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியன் 2 முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? - INDIAN 2 BOX OFFICE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.