ETV Bharat / entertainment

'புஷ்பா 2' காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது... இன்று மாலை விசாரணை! - ALLU ARJUN ARREST

Allu arjun arrest: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'புஷ்பா 2' சிறப்பு காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது
'புஷ்பா 2' சிறப்பு காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 3:22 PM IST

Updated : Dec 13, 2024, 4:01 PM IST

ஹைதபாராத்: 'புஷ்பா 2' திரைப்பட சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

அப்போது அந்த சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார். அப்போது கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அல்லு அர்ஜூன் கைது வீடியோ (Credits - ETV Bharat)

இதனைத்தொடர்ந்து ரேவதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது கடந்த 11ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று (டிச.13) அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, இந்த ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: 13 வருடங்களுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி; ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தனுஷ்! - SELVARAGHAVAN MOVIE FIRST LOOK

நாம்பள்ளி நீதிமன்றத்தில் விசாரணையை தொடர்ந்து சிக்கட்பல்லி போலீசார் சந்தியா தியேட்டர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு, ஊழியர் விகய் சந்தர் ஆகியோரை BNS 105 மற்றும் 118 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அல்லு அர்ஜூன் செகந்திராபாதில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் முடிவில் நெகடிவ் என காட்டியது. பின்னர் அல்லு அர்ஜூன் தனது நண்பரும், இயக்குநருமான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாசுடன் நாம்பள்ளி நீதிமன்றத்திற்கு சென்றார்.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி அல்லு அர்ஜூன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 13, 2024, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.