ஹைதராபாத்: அல்லு அர்ஜூன் வாழ்வில் கடைசி 24 மணி நேரம் ஒரு திரைப்படம் போல அவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. புஷ்பா திரைப்படம் மூலம் தேசிய அளவில் பிரபலமடைந்த நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற சம்பவத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டார். நீதிமன்ற காவலில் ஒரு இரவு நேரத்தை கழித்த அல்லு அர்ஜூன், தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்த பிறகு இன்று ஹைதராபாத் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ’புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்தார். இதனையடுத்து அவரை காண அங்கு கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் மற்றும் அவரது மகன் படுகாயமைடைந்தனர்.
❤️❤️ #AlluArjun pic.twitter.com/8aXyoxzq5c
— Sai Mohan 'NTR' (@Sai_Mohan_999) December 14, 2024
இதனைத்தொடர்ந்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ரேவதி என்ற பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க நிர்வாகிகள் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு, நாம்பள்ளி நீதிமன்றம் அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று இரவு தெலுங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இன்று (டிச.14) சான்சல்குடா சிறையில் இருந்து அல்லு அர்ஜூன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளரக்ளை சந்தித்த அல்லு அர்ஜூன், “இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் இழப்பு குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாதது. அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் 20 வருடங்களுக்கு மேலாக திரையரங்குகளுக்கு சென்று வருகிறேன். ஆனால் இது போன்ற துயரமான சம்பவம் நடைபெற்றது இல்லை” என்றார்.
I can’t believe what I am seeing right now..
— Rashmika Mandanna (@iamRashmika) December 13, 2024
The incident that happened was an unfortunate and deeply saddening incident.
However, it is disheartening to see everything being blamed on a single individual. This situation is both unbelievable and heartbreaking.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் எவர்கிரீன் ஜோடி... 'சூர்யா 45' படத்தில் த்ரிஷா! - TRISHA IN SURIYA 45
மேலும் தான் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்துக் கொண்டார். மேலும் பேசுகையில், “இந்த நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் சட்டட்த்தை மதிக்கிறேன்” என கூறியுள்ளார். அல்லு அர்ஜூன் சிறையில் இருந்து விடுதலையாகி அவரது வீட்டிற்கு சென்ற போது அவரது மனைவி சினேகா ரெட்டி எமோஷனலாக கண்ணீர் சிந்தினார். இதனிடையே பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் நானி, ராஷ்மிகா மந்தனா, வருண் தவான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் அல்லு அர்ஜூனை அவரடு இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.