ETV Bharat / entertainment

அமெரிக்காவில் தி கோட் படப்பிடிப்பு: விமான நிலையத்தில் நடிகர் விஜய்! வைரல் வீடியோ! - Actor Vijay in Airport video - ACTOR VIJAY IN AIRPORT VIDEO

கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தினுள் நடிகர் விஜய் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Thalapathy Vijay jets off to USA for GOAT shoot
Thalapathy Vijay jets off to USA for GOAT shoot (Photo credit: ETV Bharat Team)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 1:22 PM IST

ஐதராபாத்: நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீனாட்சி சவுத்ரி இந்த படத்தில் நடத்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் விசில் போடு பாடல் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ரஷ்யாவில் படத்தின் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. கதையில் முக்கியத் திருப்பங்களை கொண்டு வரும் காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்யாவில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, "மாஸ்கோவில் கோட் படத்தின் மிக முக்கிய பகுதிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதிய பகுதிகளை இப்படத்தில் காட்ட வேண்டும் என நினைத்து அதற்கான பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. cutting-edge de-aging தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் விஜயின் முதுமை தோற்றத்தை மிகத் தெளிவாக திரையில் கொண்டு வர பட்டக்குழு பணியாற்றி வருவதாக தகவல் வெளியானது.

இது தவிர்த்து மறைந்த நடிகர் விஜயகாந்தை இந்த படத்தில் ஏஐ தொழில்நுடபத்தின் மூலம் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுன், தி கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அப்டேட் வெளியானது. படத்தின் பெருவாரியான டப்பிங் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் விஜய் விமான நிலையம் வந்ததாக வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஜூன் மாதம் கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வரும் நடிகர் விஜய், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை சந்திக்க உள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்திலும் நடிகர் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இதேபோல் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை நடிகர் விஜய் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள்" -ராகவா லாரன்ஸ்..! - Actor Raghava Lawrence Foundation

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.