ETV Bharat / entertainment

'கெத்து தினேஷ்' முதல் 'லக்கி பாஸ்கர்' ஆண்டனி வரை... 2024ஆம் ஆண்டின் சிறந்த கதாபாத்திரங்கள்! - 2024 BEST TAMIL MOVIE CHARACTERS

2024 best tamil movie characters: 2024ஆம் ஆண்டு தமிழ்ப் படங்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்த சிறந்த கதாபாத்திரங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

2024ஆம் ஆண்டு சிறந்த கதாபாத்திரங்கள்
2024ஆம் ஆண்டு சிறந்த கதாபாத்திரங்கள் (Credits - @Prince_Pictures, 2D Entertainment, Raaj Kamal Films International, Nikhila Vimal Social media Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 6, 2024, 11:34 AM IST

சென்னை: 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு ஜானர்களில் வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை மக்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்துள்ளது. அவ்வாறு ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக அந்த படத்தின் கதை, திரைக்கதை மட்டும் இல்லாமல், அந்த படத்தின் கதாபாத்திரங்களின் தனித்துவமான நடிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2024 ரசிகர்களை கவர்ந்த சிறந்த கதாபாத்திரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிங்கம் புலி: நடிகரும், இயக்குநருமான சிங்கம் புலியை நாம் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்து ரசித்ததுண்டு. அதுமட்டுமின்றி இயக்குநராக அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆனால் 'மகாராஜா' திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதலில் 'மகாராஜா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்ததாக சிங்கம் புலி கூறியிருந்தார். அந்தளவிற்கு எந்த நடிகரும் நடிக்க அச்சப்படும் கொடூரமான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

துஷாரா விஜயன்: தனது அறிமுக படமான 'சர்பட்டா பரம்பரை' மூலம் ரசிகர்களை ஈர்த்த துஷாரா விஜயன், இந்த வருடம் 'ராயன்', 'வேட்டையன்' ஆகிய இரண்டு பெரிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருந்தார். ராயன் படத்தில் கோபம், பயம் என அனைத்து விதமான உணர்வுகளையும் ரசிகர்களை கவரும்படி வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் வேட்டையன் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரமாக சிறிது நேரம் தோன்றினாலும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அட்டகத்தி தினேஷ்: 'லப்பர் பந்து' திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக எந்த நடிகரும் இது போன்ற வயதான கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவர். ஆனால் கெத்து தினேஷ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தார். படத்தில் பல மாஸ் காட்சிகள் இவருக்கு சரியாக பொருந்தியது. லப்பர் பந்து படத்திற்கு பிறகு அட்டகத்தி தினேஷ், கெத்து தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

சுவாசிகா: 'லப்பர் பந்து' படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்தவர் சுவாசிகா. இந்த படத்தில் தினேஷ், சுவாசிகா கெமிஸ்ட்ரி வரவேற்பை பெற்றதற்கு சுவாசிகாவின் நடிப்பு முக்கிய காரணம். தினேஷ் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காமலும், தன் மகளின் காதலை எதிர்க்கும் இடங்களிலும் நடிப்பு முதிர்ச்சியாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சுவாசிகா, தமிழில் தைரியமாக மாமியார் வேடத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் பாராட்டினர். நடிகை சுவாசிகா நடிகர் ஹரிஷ் கல்யாணைவிட வயதில் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார்.

நிகிலா விமல்: 'வாழை' படத்தில் ஆசிரியையாக நடித்தார் நிகிலா விமல். பூங்கொடி டீச்சராக சமூகத்திற்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கேரக்டராக அசத்தலான நடிப்பை நிகிலா விமல் வெளிப்படுத்தி இருந்தார். நிகிலா இதற்கு முன்பு பல படங்களில் நடித்தாலும் வாழை படத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சேத்தன்: 'ஜமா' திரைப்படத்தில் தாண்டவம் வாத்தியாராக நடிகர் சேத்தனின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை பேசிய ஜமா திரைப்படத்தில் சேத்தன் நடிப்பில் நவரசத்தையும் வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார். நடிகர் சேத்தனுக்கு விடுதலை படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் படமாக 'ஜமா' அமைந்தது என ரசிகர்கள் தெரிவித்தனர்.

அரவிந்த்சாமி: 'மெய்யழகன்' திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி கதாபாத்திரம் மட்டும் படம் நெடுக பயணத்திருந்தாலும் ரசிகரக்ளுக்கு சோர்வை ஏற்படுத்தவில்லை. உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக கவர்ந்த படம் 'மெய்யழகன்'. கார்த்தி மட்டுமின்றி அரவிந்த்சாமி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்லும் பரவசம், கார்த்தியின் அன்பை ஏற்றுக் கொள்ள முடியாத குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தும் இடம் என ரசிகர்களை கலங்க வைத்தார். அரவிந்த்சாமி தனது நடிப்பின் மூலம் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரது சொந்த ஊர் நினைவுகளையும் மீட்டெடுக்க வைத்தார்.

சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவியின் நடிப்பு 'அமரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் காதல் வயப்படும் போது வெட்கப்படும் இடத்திலும், ராணுவத்தில் கணவனை இழந்த மனைவியாக கனமான முகத்துடன் இந்து ரெபேகா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி வாழ்ந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கெமிஸ்ட்ரி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்; வைரலாகும் பத்திரிக்கை..!

ராம்கி: 'லக்கி பாஸ்கர்' படத்தில் ராம்கி சிறிது நேரம் தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று சொல்லலாம். இப்படத்தில் நாயகன் ஒவ்வொரு இடத்திலும் சறுக்கும் போது ஆண்டனி கதாபாத்திரம் நம்பிக்கை கொடுத்து காப்பாற்றும். லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு ராம்கியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆண்டனி போல இப்படி ஒரு நம்பிக்கைக்குரிய நபர் தேவை என நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.