சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வர்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையில் 213 இடங்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மொத்த காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2,540 அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. 2,327 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. குரூப் 2-வில் 507 இடங்களும், குரூப் 2ஏ-வில் 1,820 பணியிடங்களும் என மொத்தமாக 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் இருந்தது.
Combined Civil Services Examination II (Group II and IIA Services) - Addendum No.8A/2024, dated 08.11.2024 to Notification No.08/2024, dated 20.06.2024 hosted on the Commission's website https://t.co/Tm3Oywzaw9 .
— TNPSC (@TNPSC_Office) November 9, 2024
Additional Vacancies: 213
Total Vacancies : 2540
For details,… pic.twitter.com/SWVsCbmIP3
இதன் மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9491-ஆக உயர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தற்போது, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 213 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்கள் 2,340 ஆக அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதேபோல், குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்