ETV Bharat / education-and-career

தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்; ’குவி ஏஐ' என்ற செயற்கை நுண்ணறிவு அறிமுகம்! - Tamil Nadu Coder Premier League

TN Coder Premier League: தமிழ்நாடு பொறியியல் மாணவர்களின் கோடிங் பயிற்சிக்கான தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக் திட்டத்தின் சாத்தியக் கூறுகள், கருத்து ஆதாரத்தை மதிப்பிடும் ‘குவி- ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை குவி அறிமுகப்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 3:50 PM IST

சென்னை: சென்னை ஐஐடியின் தொழில் முனைவோர் நிறுவனமான எட்டெக் (EdTech), குவி தளம் (GUVI), ஐஐஎம் அகமதாபாத், ஹெச்.சி.எல் (HCL) குழுமத்தின் ஒரு பகுதி ஆகியவை இணைந்து தொடர்ச்சியான ஹெக்கத்தான்கள் மூலம் தமிழக பொறியியல் மாணவர்களின் கோடிங் பயிற்சிக்கான NM-AU-TNcpl திட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இத்திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இதில் 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82 ஆயிரத்து 688 மாணவர்கள் கலந்து கொண்டனர். ‘லேர்னத்தான்’-ஐ தொடர்ந்து 200 சிறந்த அணிகள் ‘ஐடியாத்தான்’ நிலைக்கு முன்னேறி, செயற்கை நுண்ணறிவில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தின.

சென்னை ஐஐடியில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 24 மணி நேர செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் 75 சிறந்த அணிகள் பங்கேற்று முன்மாதிரிகளை உருவாக்கி, இத்திட்டத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தின. இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள், கருத்து ஆதாரத்தை மதிப்பிடும் ‘குவி- ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை குவி அறிமுகப்படுத்தியது.

இது குறித்து குவி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான அருண்பிரகாஷ் கூறும்போது, “தொழில்நுட்பமும், கல்வியும் வாழ்க்கை முறையை மாற்றும் அற்புத சக்தியைக் கொண்டுள்ளது என்பதை குவி கீக் நெட்வொர்க்ஸ் (GUVI Geek Networks Pvt Ltd) நிறுவனத்தில் உள்ள சிறிய குழு எடுத்துக் காட்டியுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள கல்லூரிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ‘உருவாக்கும் செயற்கை நுண்ணறிவை’ பயன்படுத்தியிருக்கிறோம்.

புதிய வழிமுறைகள் மற்றும் மக்கள் சிறப்பாக கற்க உதவும் வழிகளைக் கண்டறிவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்” என்றார். முன்னணி நிறுவனங்களான ஏர்பஸ், பேபால் (PayPal), ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered), பியர்சன் (Pearson) ஆகியவற்றுடன் செடின் டெக்னாலஜிஸ், குவி, டிசிஎஸ் (TCS) போன்ற நிறுவனங்களும் நடுவராக, பங்கேற்பாளராக தங்கள் நிபுணத்துவத்தை வழங்கி, ஹெக்கத்தான் நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்துள்ளன.

முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பங்களிப்போடு இந்நிகழ்வு பல்வேறு தொலைநோக்குகளையும், அனைவருக்கும் கற்றல் அனுபவங்களையும் ஏற்படுத்தியது. அத்துடன் முதல் 150 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஜோஹோ (ZOHO) போன்ற நிறுவனங்களும், மூன்றாம் நிலை வழிகாட்டி நிறுவனங்களும் உள்ளகப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளன.

இதையும் படிங்க: க்யூ.எஸ் உலக பல்கலை. தரவரிசை: ஜேஎன்யு பல்கலைக்கழகம் புது மைல்கல்! தமிழக கல்வி நிறுவனம் சாதனை! - QS Wolrd University Rankings

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.