ETV Bharat / education-and-career

பொறியியல் மாணவர் சேர்க்கை: 101 கல்லூரிகளில் 25% க்கும் கீழ் தான் அட்மிஷன்; வெளியான அதிர்ச்சி தகவல்! - engineering course seats vacant - ENGINEERING COURSE SEATS VACANT

Career guidance Ashwin: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்த நிலையில், 54 ஆயிரத்து 587 இடங்கள் காலியாக உள்ளதாகவும், 7 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை எனவும், 12 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழும், 52 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் கீழும், 101 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் கீழ் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், கல்வியாளர் அஸ்வின்
அண்ணா பல்கலைக்கழகம், கல்வியாளர் அஸ்வின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 3:20 PM IST

சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பி.டெக் இளங்கலை படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டது. பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் கல்வியாளர் அஸ்வின் கூறும்போது, “தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. கடந்தாண்டைவிட 15 ஆயிரத்து 540 இடங்கள் அதிகமாக தேர்வுச் செய்துள்ளனர். இந்தாண்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் இடங்களை நிறைய கல்லூரிகள் கொண்டு வந்தன.மொத்தத்தில் கடந்த ஆண்டு 67.19 சதவீதம் இடங்கள் நிரம்பி இருந்தன. இந்தாண்டு 68, 69 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளன. கடந்தாண்டைவிட 1.5 சதவீதம் இடம் கூடுதலாக நிரம்பி உள்ளன.

மாணவர் சேர்க்கை சதவீத பட்டியல்
மாணவர் சேர்க்கை சதவீத பட்டியல் (Credits - ETV Bharat Tamil Nadu)

பொதுப்பிரிவில் 92.5 சதவீதம் இடங்களில் 29 கல்லூரிகளில் 100 சதவீதம் இடத்தை நிரப்பி உள்ளன. அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதும் இட ஒதுக்கீட்டில் 233 கல்லூரிகளில் 100 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 95 சதவீதத்திற்கும் மேல் இடங்களை நிரப்பிய கல்லூரிகளில் 92.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 81 கல்லூரிகளும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 309 கல்லூரிகளும் நிரப்பி உள்ளன.

80 சதவீதத்திற்கும் மேல் நிரம்பிய கல்லூரிகளில் 92.5 சதவீத ஒதுக்கீட்டில் 149 கல்லூரிகளும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 430 கல்லூரியிலும் இடம் நிரம்பி உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் 7 கல்லூரியில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 12 கல்லூரிகளில் 1 சதவீததிற்கும் கீழ் பதிவாகி உள்ளது. 10 சதவீதத்திற்கும் கீழ் 52 கல்லூரியிலும், 25 சதவீதத்திற்கும் கீழ் 101 கல்லூரியிலும் நிரம்பி உள்ளது. 75 சதவீததிற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கை முடியாமல் 261 கல்லூரிகள் இருக்கிறது.

அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 433 கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வுச் செய்துள்ள கல்லூரிகள் சிறந்தக் கல்லூரியா? என்பதை சிந்திக்க வேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்திருக்க வேண்டும். பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 389 மாணவர்களை அழைத்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 568 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 8 ஆயிரத்து 821 மாணவர்கள் வரவில்லை.

அதிகரிக்கும் எண்ணிக்கை: கல்லூரிகளில் மாணவர்கள் சேராத எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துதான் வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்புடைய பிரிவில் 66 ஆயிரத்து 670 இடங்கள் 55.30 சதவீதம் நிரம்பி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினிரியங் பிரிவில் 18 ஆயிரத்து 689 இடங்களும், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 8 ஆயிரத்து 642 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 8 ஆயிரத்து 989 இடங்களும், சிவில் துறையில் 3 சதவீதம் இடங்களும், மீதமுள்ள 70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 10 சதவீதம் இடம் நிரம்பி உள்ளது.

வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் இந்த நேரத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்த மாணவர்கள் கட்டாயம் முதல் வருடத்தில் இருந்தே நன்றாக படித்து ஜெயிக்க வேண்டும். அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும். மத்திய அரசின் 3 கல்லூரியில் உள்ள 173 இடங்களும் நிரம்பி உள்ளது. அரசு உதவிப்பெறும் 3 கல்லூரியிலும் 2 ஆயிரத்து 459 இடங்களும் நிரம்பி உள்ளன. 12 அரசுக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 23 இடங்களில் 4 ஆயிரத்து 925 இடங்கள் 98.05 சதவீதம் இடம் நிரம்பி உள்ளது.

395 தனியார் பொறியியல் கல்லூரியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 918 இடங்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 211 இடங்களில் நிரம்பி 66.04 சதவீதமாக உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 உறுப்புக்கல்லூரிகளில், நடப்பாண்டிலும் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாமல் தான் இருக்கிறது. 5 ஆயிரத்து 245 இடங்களில் 4 ஆயிரத்து 530 இடங்கள் நிரம்பி உள்ளது. பண்ருட்டி, தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாமக்கல், அரியலூர் போன்ற பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்பையும், தேர்ச்சி விகித்தையும் உயர்த்தினால் மாணவர்களிடம் வரவேற்பு அதிகரிக்கும். அண்ணா பல்கலைக் கழக 4 வளாகக் கல்லூரிகளில் உள்ள 2270 இடங்களில் 100 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் 1.21 லட்சம் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு! - TNEA SEAT ALLOTMENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.